இடுகையை எழுதும்போது ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளையோ, வரியையோ குறிப்பிட்டு காட்ட அதை தடிமனாக காட்ட விரும்புவோம். அதற்கான குறுக்கு விசைகளை Ctrl+B
அதேபோல சாய்வாக காட்ட Ctrl+I, இப்படி இடுகைஎழுதும் பெட்டியில் இருந்தவாறே குறுக்கு விசைகளை பயன்படுத்தி எளிதில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். தொடர்ந்து எழுதி முடித்தவுடன் இடுகையை வெளியிடவென ஒரு குறுக்கு விசை உள்ளது. Ctrl+S அழுத்தினால் இடுகையானது உடனடியாக வெளியிடப்படுகிறது. (Published)
இதுபோல பிளாக்கரில் உள்ள அனைத்து குறுக்குவிசைகளும்((Shortcuts)) உங்களுக்காக…
பிளாக்கருக்கான குறுக்கு விசைகள் (Blogger Shortcut keys) | |
தடித்த எழுத்தில் காட்ட | Ctrl + b |
சாய்ந்த எழுத்தில் காட்ட | Ctrl + i |
ப்ளாக்கோட் (HTML- மோடில் செயல்படும்.) | Ctrl + l |
செய்த மாற்றத்தை தவிர்க்க | Ctrl + z |
திருத்தை மீண்டும் கொண்டு வர | Ctrl + y |
இணைப்பு(Link) கொடுக்க | Ctrl + shift + a |
பதிவிடும் முன் Preview (முன்னோட்டம்) பார்க்க | Ctrl + shift + p |
(வரைவாக(Draft) சேமிக்க | Ctrl + d |
இடுகையை Publish செய்ய | Ctrl + s |
ஹிந்தி மொழி ஒலிபெயர்ப்புக்கு மாற்ற | Ctrl + g |
குறிப்பு:
1. இந்த குறுக்குவிசைகள் அனைத்தும் நீங்கள் பிளாக்கரின் பழைய இடுகை திருத்தியை(Old Post Editor) பயன்படுத்தினால் மட்டுமே வேலை செய்யும்.
2. புதிய இடுகை திருத்தியில் முதல் ஐந்து குறுக்குவிசைகள் மட்டுமே செயல்படும்.
மேலும் உங்களுக்குத் தெரிந்த குறுக்குவிசைகள் இருந்தாலும் கருத்துரையின் மூலம் அறியதரலாம். நன்றி நண்பர்களே..!!
Post a Comment