GuidePedia

0


தொழிநுட்ப நண்பன்
மொபைல் நிறுவனங்கள் புதிது புதிதாக அநேக அப்ளிகேஷன்களை மொபைல் போன்களில் இணைத்து நுகர்வோரைத் தங்கள் வசமாக்க முயல்கின்றன. மொபைல்களிலேயே பணப்பரிமாற்றம் செய்ய, ரயில், பேருந்துகள் டிக்கெட் எடுக்க எனப் பல வசதிகள் வந்தன. வீடியோ கேம்கள், புகைப்படம், இசை போன்ற பல வசதிகளை ஸ்மார்ட் போன்கள் உள்ளடக்கி உள்ளன. ஆனால் இந்தத் தேவைகள் நீண்டுகொண்டே போவதால் மொபைல் நிறுவனங்களும் புதுப் புது அப்ளிகேஷன்களை உருவாக்குகின்றன. தனி நபர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அப்ளிகேஷன்களுக்குப் பரவலான வரவேற்பு உள்ளது.

சீம்லெஸ் (Seamless)
உணவுப் பிரியர்களுக்கு அவசியமான ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் இது. உணவுக்கான சிரமத்தைத் துடைத்தெறிகிறது இந்த அப்ளிகேஷன். இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த ரெஸ்டாரெண்டின் பிரசித்தி பெற்ற உணவு வகையை ஆர்டர் செய்து கொள்ள முடியும். விரல்களால் ஆர்டர் செய்தால் அடுத்த அரை மணி நேரத்தில் சுடச்சுட உணவு உங்கள் முன் தயாராக இருக்கும்.

ஊபெர் (Uber)
தனிமையில் எங்கோ மாட்டிக் கொண்டீர்கள். உங்களை விடுவிக்கும் அப்ளிகேஷன் இது. விரல்களின் மூலம் கால் டாக்ஸியை இந்த அப்ளிகேஷன் வரவழைக்கும். வரும் காரில் ஏறி நிம்மதியாக நீங்கள் விரும்பும் இடத்திற்குப் போய்ச் சேரலாம்.
இவை உதாரணங்கள் மட்டுமே. இவற்றைப் போன்றே பல அப்ளிகேஷன்கள் எதிர்வரும் நாட்களில் ஸ்மார்ட்போன்களில் நுழையப் போகின்றன. இப்போதே சில நாடுகளில் புழங்கத் தொடங்கியுள்ளன. இவை இந்தியாவிலும் விரைவில் வந்துவிடும்.

Post a Comment

 
Top