நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பைக் கொண்டு சென்றேன். அப்பொழுது அவர்கள் நீர் இஸ்லாத்தைத் தழுவி விட்டீரா? என்று வினவினர். அதற்கு நான் இல்லை என்றேன். அப்பொழுது அவர்கள் நிச்சயமாக நான் இணை வைப்பவர்களுடைய அன்பளிப்பையும் நன்கொடையையும் ஏற்பதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளேன் என்று கூறினர் (அறிவிப்பவர்: இயான்இப்னுஹிமாஸ் َضِيَ اللَّهُ عَنْ
நூல்: அபூதாவூத்,திர்மிதீ)
நூல்: அபூதாவூத்,திர்மிதீ)
நிச்சயமாக ஒரு காட்டரபி நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்பாக அனுப்பினார். அதற்குப் பகரமாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அவருக்கு ஆறு ஒட்டகங்களை அன்பளிப்புச் செய்தனர். எனவே அவர் சினந்து கொண்டார். ஆனால் இச்செய்தி நபி صلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரியவரவே அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து அவனைத் துதி செய்துவிட்டு பின்னர், நிச்சயமாக, இன்னார் எனக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். எனினும் நான் அவருக்கு அதற்குப் பகரமாக ஆறு ஒட்ட்கங்களை அன்பளிப்பு செய்தேன். ஆனால் அவர் அதற்காகச் சினந்து கொண்டார். எனவே நான் (இனிமேல்) குறைஷிகளிடமிருந்தோ, அன்ஸாரிகளிடமிருந்தோ, ஸகஃபீகளிடமிருந்தோ, தவ்ஸீகளிடமிருந்தோ அன்றி வேறு எவரிடமிருந்தும்) அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)
ஒருவருக்காக எவரேனும் பரிந்துரைத்து (சிபாரிசு செய்து) அதற்காக அவர் தமக்குப் பரிந்துரைத்தவருக்கு அன்பளிப்புச் செய்து அதனை அவர் ஏற்றுக் கொள்வாரானால் நிச்சயமாக அவர் பெரும்பாலும் வட்டியின் தலை வாயிலில் நுழைந்தவராவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்:அபூ உமாமா َضِيَ اللَّهُ عَنْ நூல்: அபூதாவூத்)
Post a Comment