உங்களிடம் புகைப்படங்கள் இருக்கும். அவற்றை தொகுத்து ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் கணினியில் பார்த்து கொள்ள முடியும். அவற்றை இனிய இசை அல்லது உங்கள் குரலுடன் தொகுத்து வீடியோ கோப்பாக மாற்றி உங்கள் கணினி, வீடியோ பிளேயர், மொபைல் போன்றவற்றில் காணும் வண்ணம் செய்வதற்கான ஒரு மென்பொருளை பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி என்பதுதான் அந்த மென்பொருள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.இதனை தரவிறக்க இங்கு செல்லுங்கள். இல்லையெனில் நேரடி தரவிறக்க சுட்டி இங்கே.
இதனை காப்பி செய்து உங்கள் இணைய உலாவியில் முகவரி பகுதியில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் துவங்கி விடும். MSI கோப்பாக வரும். 5MB அளவிலானது. நிறுவி கொள்ளுங்கள்.
இந்த மென்பொருள் மூலம் புகைப்படங்களை வரிசைபடுத்தி கொள்ளலாம். வரிசைப்படுத்திய படங்களின் பின்னணியில் வர்ணனையாக உங்கள் குரலை மைக் மூலம் ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். அல்லது இனிய பின்னணி இசை அல்லது பாடலை பின்னணியில் சேர்த்து கொள்ளலாம். உங்களிடம் உள்ள MP3 பாடல்களை கூட பின்னணி இசையாக சேர்த்து கொள்ளலாம்.
உருவாகும் வீடியோக்களுக்கு தலைப்புகள் (Titile) மற்றும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அடுத்து அழகிய எபக்ட்ஸ் கொடுத்து கொள்ளலாம். அழகான எழுத்துருக்களை(Fonts) தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
இறுதியில் வரிசைப்படுத்திய புகைப்படங்களை வீடியோவாக WMV வடிவில் உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
இவற்றை உங்கள் கணினி, வீடியோ பிளேயர், மொபைல் போன்றவற்றில் ஏற்றி பார்த்து கொள்ள முடியும். யூடியுப் போன்ற வீடியோ பகிரும் தளங்களிலும் ஏற்றி கொள்ளலாம்.

Post a Comment