மனிதனும், மொபைலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. அதனிடம் அடிமைபட்டு கிடக்கும் காலம் வெகுவிரைவில் இல்லை என்று கூட சொல்லலாம்… அப்படிப்பட்ட மொபைலுக்கு உயிர்நாடி என்று சொன்னால் அது பேட்டரி தான். அத்தகைய பேட்டரியை நாம் சரிவர பராமரிக்காவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து மிக விரைவில் அது தன் செயல் திறனை இழந்து விடும். பேட்டரியின் ஆயுட்காலத்தை கூட்டசில யோசனைகள்:
# புதிய மொபைல் வாங்கும்போதோ அல்லது புதிய பேட்டரி வாங்கும் போதோ முதலில் 8 மணி நேரம் சார்ஜ் செய்வது மிகவும் அவசியம் 1 மணி அல்லது 2 மணியில் பேட்டரி புல் என காட்டினாலும் சார்ஜ்செய்வதை நிறுத்தாதீர்கள்8 மணிநேரம் முடிந்த பின்பே சார்ஜரை நீக்குங்கள் .
# முதல் சார்ஜிக்கு பிறகு எப்போது மொபைல் “பேட்டரி Low “ என காட்டுகிறதோ அப்போதுதான் சார்ஜ்செய்ய ஆரம்பிக்க வேண்டும்ஒரு பாயின்ட் அல்லது இரண்டு பாயின்ட் குறைந்தாலோ உடனே சார்ஜ் செய்ய ஆரம்பிக்க கூடாது
# மொபைலின் பேட்டரி mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரியா எனசோதித்து பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணையவசதி உள்ள மல்ட்டிமீடியா மொபைலுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரி தேவை.
# இரவு நேரங்களில் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு காலையில் எடுக்கும் வழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி சார்ஜ் செய்வதால் உங்களது பேட்டரி விரைவில் பருத்து, பின் பயன்படாமல் போகும்.
# புளூடூத் வசதி, வை-பை வசதி மற்றும் இணைய வசதியை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள் மற்ற நேரங்களில் அணைத்து வைப்பதே சிறந்தது. எப்போதும் திறந்தே வைத்திருந்தால் பேட்டரியின் திறன் குறைந்து கொண்டே வரும்
# ரிங்டோனுக்கு முழு பாட்டையும் வைக்காமல் “கட்சாங்ஸ்” எனப்படும் குறுகிய பாடல்களையே ரிங்டோனாக வைத்தால் பேட்டரியின்திறன் அதிகமாக செலவழிக்கப்படுவது தவிற்கப்படும்
# மொபைலை FM ரேடியா போல் எப்போதும் பாடல்களை பாட விடாதீர்கள்.
# உங்களது மொபைலின் திரை வெளிச்சத்தை குறைத்து வையுங்கள். அனேகமாக அனைத்து மொபைல்களிலும் பவர்சேவர்மோட்(PowerSaverMode) இருக்கும் அதை ஆக்டிவேட்(Activate) செய்யுங்கள் இதனால் உங்களது பேட்டரி நீண்ட காலத்திற்கு வரும்.
# வால்பேப்பர் மற்றும் ஸ்கீரின்சேவர்களில் பிக்ஸ்ல்கள்(Pixels) அதிகமுடைய படங்களை வைக்காதீர்கள் இதனால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீரும்
# அதிக வெப்பமுள்ள இடங்களில் மொபைலையோ, பேட்டரியையோ வைக்காதீர்க்கள். இதனால் உங்களது பேட்டரி திறன் குறையக்கூடும்
# கூடுமான வரையில் கம்பெனிகளின் ஒரிஜினல் பேட்டரிகளையே வாங்குங்கள். 100 ரூபாயில் கிடைக்கிறது, 200 ருபாயில் கிடைக்கிறது என்று மலிவான, தரமற்ற பேட்டரிகளை வாங்காதீர்கள் இத்தகைய பேட்டரிகள் வெடித்து உங்களுக்குஅபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போல கம்பெனிகளின் ஒரிஜனல் சார்ஜர்களையே பயன்படுத்துங்கள் இதனால் ஏற்படும் மின் விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.
Post a Comment