GuidePedia

0

வின்வெளியில் மேலேறிச் செல்ப வனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது.
விண்வெளிப் பயணம் மேற்கொள் பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக் கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.
ஆனால் இந்த அறிவு 1400 வருடங் களுக்கு முன்னர் எவருக்கும் இருந்த தில்லை. மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.
இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவ னின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறை வாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம். அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 304, 323வது குறிப்பையும் காண்க!

Post a Comment

 
Top