GuidePedia

0


    முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி 
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.
    அண்டை வீட்டுக் காரர் அவரது எல்லையில் ஒரு மரக்குச்சி நடுவதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.
    அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர் தம் அண்டை வீட்டாரைத் தொல்லை படுத்த வேண்டாம் என்று என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவ்விருவரில் யாருக்கு (முதலில்) அன்பளிப்புக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன், அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த வீட்டின் வாசல் உனக்கு மிக அருகில் உள்ளதோ அந்த வீட்டாருக்கு என்று விடையளித்தார்கள் . 
ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி
    அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள். புஹாரி, முஸ்லிம்.
    அபூதர்! நீ குழம்பு சமைத்தால் (அது குறைவாக இருந்தால்) அதில் தண்னீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். முஸ்லிம்
    எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம். 

Post a Comment

 
Top