[புதியவர்களுக்கு]
பிளாக்கரில் நல்ல தகவல்களை எழுதுகிறேன்..ஆனால் டிராபிக் வருவதே இல்லை என்ன செய்ய?
ஒரு புதிய வலைப்பதிவர் நண்பர் ஒருவரின் கேள்வி இது. அவருக்கான பதிலே இன்றைய பதிவாகவும் உள்ளது. பிளாக்கர் தளங்கள் வைத்திருப்பவர்களுக்கான அடிப்படை விடயங்கள் இவை. பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
நல்ல பல தகவல்கள் அடங்கிய பதிவுகள், கட்டுரைகளை எழுதினாலும் அவற்றை இணையத்தின் மூலம் மற்றவர்களுக்கு கொண்டு செல்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்…
நீங்கள் பிளாக் தொடங்கி எழுதுவதோடு இருந்துவிடாமல், அவற்றை பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.
சமூக தளங்கள் (SOCIAL NETWORKS) :
இன்றைய உலகில் உடனடி தகவல் தொடர்பு ஊடகமாக, குழுத்தொடர்பு ஊடகமாக விளங்குவது சமூக வலைத்தளங்கள்தான்.
Social Network sites என்று அழைக்கப்படும் இந்த சமூக இணையதளங்களில், இணைந்து, அதில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு, உங்களுடைய வலைத்தளப் பதிவுகளை பகிரலாம்.
மின்னஞ்சல் வழி பகிர்தல் (SHARE POST VIA EMAIL) :
உங்களுடைய மின்னஞ்சல் கணக்கில் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு உங்கள் பதிவின் இணைப்பு, பதிவின் சுருக்கத்தை மின்னஞ்சலில் குறிப்பிட்டு, நண்பர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்பலாம்.
மின்னஞ்சல் சந்தா (EMAIL SUBSCRIPTION):
Email Subscription என்று கூறப்படும் மின்னஞ்சல் சந்தா விட்ஜெட்டை உங்கள் வலைப்பூவில் இணைப்பதன் மூலம் வாசகர்களை அதிகரிக்கலாம். அவர்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு, உறுதி செய்வதன் மூலம் மின்னஞ்சல் மூலம் உங்களுடைய புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழி பெற்றுக்கொள்ள முடியும்.
புதிய பதிவை நீங்கள் எழுதி வெளியிடும்போது, தானாகவே அவர்களின் மின்னஞ்சலுக்கு உங்களுடைய புதிய பதிவு சென்று சேர்ந்துவிடும். அந்த மின்னஞ்சலில் உள்ள பதிவின் இணைப்பு சுருக்கத்தை சொடுக்கி உங்கள் தளத்திற்கு வந்து படிக்க இது ஒரு அற்புதமான வழியாகும்.
சேரிங் பட்டன் (SOCIAL NETWORK’S SHARING BUTTON):
சமூக தளங்களின் இந்த பட்டனை தளத்தில் இணைத்துக்கொண்டால், இணைய தளத்திற்கு வருகை தரும் பலரும், தங்களின் நண்பர்களுக்கு உங்களது பதிவுகளை, கட்டுரைகளை பகிர்வதற்கு ஒரு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கிறது. இதன்மூலம் பல புதிய நண்பர்கள் உங்கள் தளத்ததின் பார்வையிடுவதற்கு வசதி ஏற்படும்.
தரமிக்க உள்ளடக்கம் (QUALITY POST CONTENT) :
நீங்கள் எழுதும் பதிவுகள் அனைத்தும் தரமிக்கதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பதிவினையும், வருகையாளர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் எழுத வேண்டும். அல்லது அவர்கள் ரசித்து, பாராட்டும்படி இருக்க வேண்டும்.
உங்களது எழுத்து நடை, கட்டுரைகளின் தரம், பயன்படும் நிலை ஆகிய அனைத்தும் அவர்களை கவர்ந்த்தென்றால், தொடர்ச்சியாக உங்களது தளத்திற்கு வருகை தருவார்கள்.
எழுதும் பதிவில் உள்ளடத்திற்கு பொருத்தமான தலைப்பு இருத்தல் வேண்டும். கவர்ச்சிகரமான தலைப்பிட்டுவிட்டு, தொடர்பில்லாமல் உள்ளடக்கம் இருத்தல் கூடாது.
வலைப்பூ வார்ப்புரு (CLEAN TEMPLATE):
நல்ல தெளிவானதொரு Template வார்ப்புரு ஒன்றினைத் தேர்ந்தெடுத்திருப்பது நல்லது. கண்ணை உறுத்துகிற அடர்ந்த நிறத்தில் வார்ப்புருவினை தேர்ந்தெடுப்பதால், தளத்தின் வருகையாளர்கள் படிப்பதற்கு சிரம்ம் ஏற்படும். இதனாலேயே தளத்திலிருந்து விரைவாக வெளிவேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
விரைவாக திறப்பதற்கேற்ப குறைந்த அளவுடைய வார்ப்புருக்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
தேவையில்லாத விட்ஜெட்களைத் தவிர்ப்பதும் நல்லது. இதனால் தளம் விரைவாக திறக்கும். மேலும் குறைந்த இணையவேகம் உள்ள கணினிகள், ஆண்ட்ராய்ட் மொபைல்கள், டேப்ளட் போன்ற சாதனங்களில் உங்களது தளம் வெகு விரைவாக திறக்கும். இதன் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிகை அதிகரிக்கும்.
தொடர்புடைய பதிவுகள் (VIA RELATED POSTS) :
Related widget என்ற சொல்லப்படக்கூடிய தொடர்புடைய பதிவுகளுக்கான நிரல் பெட்டியைச் சேர்ப்பதன் மூலம், தளத்திற்கு வருகை தரும் வருகையாளர்கள், படிக்கும் கட்டுரைக்குத் தொடர்புடைய கட்டுரைகளை படிப்பதற்கு வசதி ஏற்படும்.
உதாரணமாக கணினி தொடர்புடைய பதிவை வாசித்த முடித்தபிறகு, அது தொடர்புடைய மற்றுமொரு பதிவை வாசிக்க இந்த வசதி பயன்படும்.
கருத்திடுதல் (COMMENTS ON OTHERS BLOG) :
உங்களுடை பிளாக்கர் தளங்களைப் போன்றே, மற்றவர்களும் வலைப்பூ தொடங்கி எழுதிக்கொண்டிருப்ப்பார்கள். அவர்களின் வலைத்தளங்களுக்குச் சென்று, அவர்களுடைய ஆக்கங்களைப் படித்து, உங்களுடைய உண்மையான கருத்தினை பகிர்தல் வேண்டும்.
கருத்துப் பகிர ஒவ்வொரு பிளாகரிலும் கருத்துப்பெட்டி இருக்கும்.
பிளாக்கர் தளத்திற்குப் பயன்படும் மிக முக்கியமான, நல்லதொரு டிராபிக் கொண்டுவருவதற்கான முதன்மை வழிமுறைகள் மட்டுமே இது . இதுபோன்ற நிறைய வழிமுறைகள் இருக்கின்றன.
முக்கியமான குறிப்பு: நீங்கள் எழுதிய வலைப்பதிவை ஒரு முறைக்கு இருமறை வாசித்துப் பாருங்கள்.. ஒரு வலைப்பதிவராக இல்லாமல், ஒரு வாசகராக இருந்து வாசித்துப் பார்க்கும்போது, பதிவின் தொடர்ச்சி, பதிவில் உள்ள எழுத்துப்பிழைகள், மற்றகுறைகள் உங்களுக்குத் தெரியும்.
ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை திருத்தி, பதிவை இறுதி செய்து வெளியிடுவது மிக முக்கியமான ஒன்று.
மேலும் பிளாக்கர் தொடர்புடைய பதிவுகளுக்கு Blogger tips என்ற இணைப்பில் சென்று வாசியுங்கள்.
*****
கேள்விக்கேட்ட புதிய வலைப்பதிவர் நண்பருக்கும், இறுதி வரை வாசித்த உங்களுக்கும்…. மிக்க நன்றி… !
அடுத்த பயன்மிக்க பதிவொன்றில் சந்திப்போம்.
- மொஹமட் ஹஸ்ஸான்
Post a Comment