GuidePedia

0


ஆன்லைனில் இணையப் பக்கங்களை பிடிஎப் கோப்புகளாக மாற்றுவது பற்றி ஓர் இடுகை எழுதி இருந்தேன். அதே வேலையை செய்ய மேலும் சிறப்பு வாதிகளுடன் ஒரு மென்பொருள் உதவுகிறது. அதனை இந்த இடுகையில் காண்போம்.

இதனை உங்கள் கணினியில் பிரிண்டர் போன்று நிறுவி கொள்ள வேண்டும். பிரிண்ட் வசதி உள்ள அனைத்து செயலிகளிலும் பிடிஎப்பாக சேமித்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் வோர்ட், நோட்பேட், பெயிண்ட் என்று எந்த மென்பொருளின் கோப்புகளையும் பிடிஎப்பாக சேமித்து கொள்ள முடியும்.

நீங்கள் உருவாக்குகிற பிடிஎப் கோப்புகளின் பின்னணியில் வாட்டர் மார்க்காக நீங்கள் விரும்பும் வார்த்தைகளை இணைத்துக் கொள்ள முடியும். இவற்றிற்கு பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாத்து கொள்ளும் வசதியையும் இந்த மென்பொருள் தருகிறது.


பிடிஎப் மட்டுமல்ல. JPEG, PNG, EPS, BMP, TIFF, PS, PCX என்று எந்த வடிவிலும் கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். அதாவது நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இணையப் பக்கத்தையோ, வோர்ட் கோப்பையோ படமாக JPEG வடிவில் கூட சேமித்து கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் பெயர் Bullzip PDF Printer. இலவசமாக கிடைக்கிறது. இதனை இந்த சுட்டிக்குசென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். உங்கள் பிரிண்டர் பகுதியில் Bullzip PDF Printer நிறுவப்பட்டு இருக்கும்.

இனி எந்த மென்பொருளிலும் பிரிண்ட் வசதி மூலம் உங்கள் கோப்புகளை பிடிஎப் வடிவிலோ அல்லது வேண்டிய பட வடிவிலோ சேமித்து கொள்ளலாம். File மெனுவில் Print கிளிக் செய்து கொள்ளுங்கள். வருகின்ற விண்டோவில் Bullzip PDF Printer ஐ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இனி Print கிளிக் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் வேண்டுமென்ற கோப்பு வடிவை தேர்ந்தெடுங்கள். இனி Save செய்தால் போதுமானது. நீங்கள் விரும்பிய கோப்பு கிடைத்து விடும்.


இது எளிமையான முறை. அந்த செயலியிலும் (Application) இருந்தும் பிடிஎப் கோப்பினை எளிதாக உருவாக்கி கொள்ளுங்கள். நமது இந்த பிளாக்கில் இடுகைக்கு கீழே உள்ள 'Print this post' கிளிக் செய்து பிரிண்டரில் Bullzip PDF Printer தேர்வு செய்து கொண்டு வேண்டுமென்ற இடுகைகளை சேமித்து கொள்ளுங்கள்.

Post a Comment

 
Top