GuidePedia

0



86:11 :قال تعالى: [والسماوات ذات الرجع]- الطارق
'திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக'.- 86:11

இந்த வசனத்தில் திருப்பித் தரும் வானம் என்று வானத்திற்கு ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான். வானம் ஏராளமான விஷயங்களை நமக்குத் திருப்பித் தந்துகொண்டே இருக்கிறது. கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக வானம் நமக்கு திருப்பித் தருகின்றது. இங்கிருந்து அனுப்புகிற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகின்றது.

வானம் திருப்பித் தரும் தன்மை பெற்றிருக்கும் காரணத்தினால்தான் இன்றைக்கு நாம் ரேடியோ, கைத்தொலைபேசி போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகின்றது. மேல்நோக்கி அனுப்பப்படும் செய்திகள் தாம் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ்நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன. இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கிருந்து நாம் ஒளிபரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் உடனே நமக்கு திருப்பி அனுப்புகிறது.

யாருக்காவது 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வானத்திற்கு திருப்பித் தரும் வானம் என்று அடைமொழி கூற முடியுமா? இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப்படிக்கத் தெறியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எப்படிக் கூற முடியும்? இது நிச்சயமாக வானத்தை இத்தன்மையோடு படைத்த இறைவனுக்கு மட்டுமே கூற முடியும்.

Post a Comment

 
Top