"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ"இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
"வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்"
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: பைஹகீ
"மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்"
அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: பைஹகீ
"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்"
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார்ந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷாرَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: நஸயீ
அறிவிப்பவர்: ஆயிஷாرَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: நஸயீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஆறாவது ரக்அத்திலும் ஏழாவது ரக்அத்திலும் மட்டுமே உட்காருவார்கள். ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூத், நஸயீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து விட்டு ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: முஸ்லிம், நஸயீ
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: முஸ்லிம், நஸயீ
இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
"உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்" என நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: அபூதாவூத்
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: அபூதாவூத்
Post a Comment