GuidePedia

0


இன்றை கையில் Smart Phone இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் Android போனை கையில் வைத்துள்ளனர். சென்ற பதிவில் பார்த்தது போல Android Phoneகளுக்காகவே Google Playயில் பல APPS இலவசமாக பெற முடியும்.


இன்றையப் பதிவில் Android Phoneகளுக்கான இலவச APPS ஐந்தினைப் பார்ப்போம்.

Android இயங்குதளத்தில்(Android operating system) தமிழை அடிப்படையாக கொண்ட பல அப்பிளிகேஷன்கள் இலவசமாக நீங்கள் Download செய்யலாம்.


1. Google Translate:

Google Translate மொழிப்பெயர்ப்பு ஏற்ற ஒரு கருவியாக செயல்படுகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். எந்த ஒரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய இது பயன்படுகிறது. இதை உங்கள் Android Mobile-களில் APPS தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால், தேவையானபோது எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த Google Translate Application-ஐ இலவசமாக தரவிறக்கம் செய்ய
இங்கு
செல்லவும். இதில் அமைந்திருக்கும் சிறப்பு 17 மொழிகளில் குரல் பதிவின் வழியாகவும் மொழி பெயர்க்கலாம் என்பதே. இந்த Google Translate மூலம் உலக மொழிகளில் 64 மொழிகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யலாம்.

2. English To Tamil Dictionary:

சாதாரணமாக நாம் ஆங்கிலத்தில் படிக்கும்போது அவற்றுக்கான பொருள் புரிந்தாலும், அவற்றிற்குரிய சரியான தமிழ் அர்த்தம், தமிழ் வார்த்தை தெரியாது. அதுபோன்ற நிலைகளில் ஆங்கிலவார்த்தைகளுக்கு சரியான தமிழ் பதத்தை கண்டறிய உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயன்படும். English to Tamil Dictionary என்ற இந்த APPS னைத் தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பைக் Click செய்யவும். 
https://play.google.com/store/apps/details?id=com.burningpassion.tamildictionary&feature=search_result


இது முற்றிலும் இலவசமே..!

3. Youtube Tamil Movies

Youtube Tamil Movies என்ற இந்த APPS சினிமா பிரியர்களுக்கும், Youtube வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய APPS ஆகும். இதன் மூலம் Youtube ல் உள்ள Movie Trailer, short film, education videos, technology videos, போன்ற வீடியோக்களை உங்கள் Android Phone களிலேயே பார்த்து மகிழலாம்.

இந்த APPS னை இலவசமாக Download செய்ய:

https://play.google.com/store/apps/details?id=com.tamil.movies.youtube&hl=en


4. Yosi Application

Yosi Application மூலம் பழமொழிகள், முதுமொழிகள், விடுகதைகள் ஆகியவற்றின் தொகுப்புகளை காணமுடியும். இந்த யோசி அப்ளிகேஷன் சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த APPS னை Download  செய்ய இந்த முகவரிக்கு செல்லவும்.

https://play.google.com/store/apps/details?id=com.handheldapplication.yosi&feature=search_result

5. AR Rahman Tube Tamil application:

A.R. Rahman Tube Tamil appication மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களில் உலகப் புகழ்ப்பெற்ற இசைகளை கேட்டு மகிழலாம். இது முற்றிலும் இலவச AppS ஆகும்.

இந்த அப்ளிகேஷன்னை இலவசமாக Download செய்ய:

https://play.google.com/store/apps/details?id=com.video.arrahman&hl=en

Post a Comment

 
Top